IIFA திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகா கலைஞன்
கமலஹாசன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மகா கலைஞன், தனது 6 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் தொடங்கிய இவர் திரைப்பயணம் இன்று விக்ரம் வரை தொடர்கிறது.
@youtube
தனது சிறந்த நடிப்பாலும், ஆக்கப்பூர்வமான எழுத்தாலும், உன்னதமான படைப்புகளை கொடுத்த கமலஹாசன், இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநராவார்.
இவர் இயக்கிய ஹேராம், விருமாண்டி, விஸ்பரூபம், தேவர் மகன் போன்ற படங்கள் இன்னும் வருங்கால இயக்குநர்களுக்கு பாடப்புத்தமாக உள்ளது.
@youtube
கமல்ஹாசன் நடித்த மூன்றாம் பிறை, நாயகன், மாகாநதி, இந்தியன், அன்பே சிவம் போன்ற படங்கள் அவரது நடிப்புக்கான பல தேசிய மற்றும் மாநில விருதுகளை பெற்றுக் கொடுத்தது.
மேலும் அவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் போன்ற இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது
இந்நிலையில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
@youtube
இதனை தொடர்ந்து அவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள், சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த ஆண்டிற்கான சர்வதேச திரைப்பட விழா, அபுதாபியில் வரும் மே 26, 27 போன்ற திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.