பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் தேசக்கட்டுமானம் நடக்காது: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்
சர்வதேச மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பெண்களுக்கு சமமான அதிகாரம் வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும், ம.நீ.ம தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "இந்த சர்வதேச மகளிர் தினத்தில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் உண்மையான தேசக்கட்டுமானம் நடக்காது என்பதை நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.
அவர்களின் தலைமை, வலிமை மற்றும் தொலைநோக்குப் பார்வை முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்தவை. நமது மக்கள்தொகையில் பாதி பேரின் திறனை நாம் வெளிப்படுத்த வேண்டும், ஆட்சியில் அவர்களின் சமமான பங்கை உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |