அந்த நேரத்தில் என்ன செய்வேன்னு கவுதமிக்கு மட்டும் தான் தெரியும்: கமல் ஓபன் டாக்
எனக்கு கோபம் வந்தால் என்ன செய்வேன்னு கவுதமிக்கு தெரியும் என்று நடிகர் கமல்ஹாசன் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் கமல்
தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசனை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த வெற்றிக்குப் பிறகு தற்போது, ‘இந்தியன் 2’, ‘கல்கி’ 2898, k.H 233. KH 234 உட்பட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கமல் ஓபன் டாக்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், எனக்கு கோபம் வந்தால் நான் என்னசெய்வேன் என்று கவுதமிக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘நீங்களும் கோடீஸ்வரன் ஆகலாம்’ என்ற நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், நடிகை கவுதமி ஜோடியாக கலந்து கொண்டனர். அப்போது அந்த நிகழ்ச்சியை பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கினார். அப்போது, கமல்ஹாசனிடம் அந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி புகழ் ரம்யா மெடிடேஷன் குறித்து கேள்வி ஒன்று கேட்டார்.
அதற்கு சிரித்துக் கொண்டு பேசிய கமல்ஹாசன், மெடிடேஷன்னா என்னவென்று எனக்கு தெரியாது. ஒரு சமயம் ‘விஸ்வரூபம்’ படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, நான் ரொம்பவே டென்ஷனாக இருந்தேன். உடனே நான் ரூமிற்கு சென்று படுத்து தூங்கிவிட்டேன்.
இப்படி எனக்கு எப்போதெல்லாம் பிரச்சினை வருகிறதோ, கோபம் வருகிறதோ அப்பொதெல்லாம் நான் தனியாக போய் படுத்து தூங்கிவிடுவேன். இந்த விஷயம் கவுதமிக்கு மட்டும்தான் தெரியும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |