100வது பிறந்தநாள் காணும் மூத்த தலைவர்: வாழ்த்து கூறிய நடிகர் கமல்ஹாசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இன்று நூறாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில் நடிக்க கமல்ஹாசனும் தனது வாழ்த்தினை அவருக்கு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், "நூறாண்டு காணும் தொண்டு. எல்லோரும் சமமென்னும் காலம் வரவேண்டும்; நல்லோர் பெரியர் என்னும் காலம் வர வேண்டும் என்பது பாரதியின் கனவு.
அதன் நனவான வடிவமே மாபெரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் வாழ்வு. சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் மொத்தத்தையும் அர்ப்பணித்து, அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்களத்தில் முன்னின்று வாழ்ந்துகாட்டிக் கொண்டிருக்கிறார் ஐயா.
இப்படி ஒருவர் இருக்க இயலுமா என்று வியக்கும் வண்ணம் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட பெருந்தகை தோழர் நல்லக்கண்ணு எளியோரின் வாழ்த்துப்படி நூறாண்டு காண்கிறார். அவருக்கு என் வாழ்த்து" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |