பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடியது! கமல்ஹாசன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளம் விடுதலை செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மகிழச்சி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்று (மே 18) இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு.
ஆளுநர் முடிவை தாமதப்படுத்தினால், அதனை நீதிமன்றம் பரிசீலனை செய்யலாம். அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ஆவது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்கிறது என்று தீர்ப்பளித்தது.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
பறையடித்து தனது விடுதலையை கொண்டாடிய பேரறிவாளன்! நெகிழ வைக்கும் காணொளி
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம்.
பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது.
வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டள்ளார்.