கன்னட மொழி விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது என கமல் ஹாசன் திட்டவட்டம்
கன்னட மொழி விவகாரத்தில் எதிர்ப்புகள் வரும் நிலையில் நடிகர் கமல் ஹாசன் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கமல் உறுதி
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக்லைஃப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்துள்ளார். இதற்கான 'புரோமோஷன்' நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய கமல், "தமிழில் இருந்து தான் கன்னடம் உருவானது" என்றார்.
இவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், கன்னட மொழிக்கு வரலாறு உள்ளது. அது கமலுக்கு தெரியாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
மேலும், அமைச்சர் சிவராஜ் கூறுகையில், "கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.
இந்நிலையில் கமல் ஹாசன், "கன்னடம் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது. நான் சொன்னதை உங்கள் பக்கம் இருந்து பார்த்தால் தவறாக தான் தெரியும். அரசியல்வாதிகள் மொழி குறித்து பேச தகுதிபெறவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |