மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை ரஷ்யா செய்கிறது! கடுமையாக விளாசிய கமலா ஹாரிஸ்
உக்ரைனில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை ரஷ்யா செய்வதாக கமலா ஹாரிஸ் தாக்கி பேசியுள்ளார்.
கமலா ஹாரிஸ்
ஜேர்மனியின் மூனிச் நகரில் நடந்த ''மூனிச் பாதுகாப்பு மாநாட்டில்'' அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கலந்துகொண்டார்.
அப்போது அவர் உக்ரைனுக்கு எதிராக போர் புரிந்துவரும் ரஷ்யாவை கடுமையாக சாடினார். போர் குறித்து கமலா ஹாரிஸ் கூறுகையில்,
'உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் குறித்த விடயங்களில் நாங்கள் ஆதாரங்களை ஆய்வு செய்துள்ளோம். சட்டத் தரங்களை நாங்கள் அறிவோம். எந்த சந்தேகமும் இல்லை, இவை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்' என தெரிவித்தார்.
@Thomas Kienzle/AFP
கொடூரமான செயல்கள்
மேலும் அவர் கொடூரமான கொலை, சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் நாடு கடத்தல் போன்ற செயல்களை ரஷ்யா புரிந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு வருடத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Thomas Kienzle/POOL/AFP via Getty Images