கமலா ஹாரிஸ் பிரசார நிதி விவகாரம்: பிரபலங்களுக்கு மறைமுகமாக வழங்கப்பட்ட தொகை
அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரசார நிதி அறிக்கைகள் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளன.
அந்த அறிக்கைகளில், ஹாரிஸை ஆதரித்த பிரபலங்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு பெரும் தொகை செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
NBA நட்சத்திரமான லெப்ரான் ஜேம்ஸின் SpringHill Entertainment நிறுவனத்திற்கு, ஜனவரி 28, 2025 அன்று ஹாரிஸ் பிரசாரக்குழுவால் 50,000 டொலர் செலுத்தப்பட்டுள்ளது.
இது, ட்ரம்ப் பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகே நடைபெற்றது. அந்தக் கட்டணத்தைப் பற்றிய தகவல்கள் மிகக் காலதாமதமாக வெளியாகின.
Cardi B சொன்னது ஒன்று – நடந்தது வேறு
ரேப்பர் Cardi B-யின் Washpoppin INC நிறுவனத்திற்கும் 'பிரசார நிகழ்ச்சி தயாரிப்பு' எனும் பெயரில் 58,867 டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால், கார்டி பி இதற்கு முன் “நான் ஒரு டாலரும் பெறவில்லை” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரும் தொகை பெற்ற பிற பிரபலங்கள்
- Beyoncé: $165,000 (4 நிமிட உரைக்கு)
- Lady Gaga: $132,753
- Gracie Abrams: $132,335
- Khalid: $98,000
- Oprah Winfrey: $500,000
- Al Sharpton-ன் அமைப்பிற்கு: $100,000
இந்த விவகாரங்களுக்கு பதிலளித்த ஹாரிஸ் பிரசார குழு, “எந்த பிரபலத்திற்கும் பணம் செலுத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |