குழாயடிச் சண்டை போல மாறிவரும் அமெரிக்க அரசியல்: மாறி மாறி மோசமாக விமர்சிக்கும் பிரபலங்களின் மனைவிகள்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெற உள்ளது.
தேர்தல் குறித்த செய்திகளுடன், வேட்பாளர்களைக் குறித்த மோசமான செய்திகளை வெளியிடும் கீழ்த்தரமான பிரச்சாரங்களும் சூடு பிடிக்கத் துவங்கிவிட்டன.
கமலா ஹரிஸைக் குறிவைத்து தாக்குதல்கள்
கமலாவும், Montel Williams என்பவரும் சில காலம் காதலித்துவந்தனர். அது குறித்தும், கலிபோர்னியா அரசியல்வாதியான Willie Brown என்பவருடன் கமலா தவறான உறவு வைத்திருந்ததாகவும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்காக, கமலா ஹரிஸ் ஆதரவாளரான Ana Navarro என்னும் பெண், ட்ரம்பின் மூன்றாவது மனைவியான மெலானியா ட்ரம்ப் ஆடையில்லாமல் பத்திரிகை ஒன்றிற்கு போஸ் கொடுத்த புகைப்படத்தை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டார்.
அத்துடன், 2021ஆம் ஆண்டு, ட்ரம்ப் ஆதரவாளரான JD Vance என்னும் அரசியல்வாதி, கமலாவை பிள்ளையில்லா பூனைப்பெண் என விமர்சித்திருந்ததைக் குறித்த செய்தி ஒன்று வெளியானது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ’என்னையும் Coleஐயும் போன்ற இரண்டு அழகான பிள்ளைகள் உங்களுக்கு இருக்கும்போது, நீங்கள் எப்படி குழந்தையில்லாதவராக இருக்கமுடியும்’ என கமலாவிடம் கேட்பதுபோல், தன் தாய்க்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் கமலாவின் மகளான Ella.
கமலா ஹரிஸின் கணவரின் முன்னாள் மனைவி கருத்து
தற்போது, கமலா ஹரிஸின் கணவரான Douglas Emhoffஇன் முன்னாள் மனைவியான Kerstin Emhoff, ட்ரம்ப் தரப்பிலிருந்து கமலாவை விமர்சித்த ட்ரம்ப் ஆதரவாளரான JD Vanceஇன் மனைவியான உஷாவை மோசமாக விமர்சித்துள்ளார்.
Usha’s going to be in the ex-wives club in 2025. Mark my words. https://t.co/cu4yOEMfyK
— Kerstin Emhoff (@keprettybird) July 31, 2024
என்னுடைய வார்த்தைகளைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ள Kerstin Emhoff, 2025இல் உஷா, முன்னாள் மனைவிகள் குழுவில் இணைந்துவிடுவார் என குறிப்பிட்டுள்ளார்.
ஆக மொத்தத்தில், அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் குழாயடிச் சண்டை போல தரம் தாழ்ந்துவிட்டது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |