திடீரென அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட கமலா ஹாரிஸ்: முதல் அமெரிக்கப் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றார்
அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ், நேற்று திடீரென அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
நேற்று காலை மணி 10.10 முதல் 11.35 வரை கமலா அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்தார்.
விடயம் என்னவென்றால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு மருத்துவப் பரிசோதனைக்காக செல்லவேண்டியிருந்ததால், அந்த நேரத்தில், அவருக்கு பதிலாக கமலா அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதிபர் ஜோ படனுக்கு குடலில் கொலனோஸ்கோப்பி என்ற மருத்துவப் பரிசோதனை செய்யப்பட இருந்தது. அப்போது அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்படவேண்டியிருந்ததால், அமெரிக்க சட்டப்படி அவர் மயக்கத்திலிருக்கும் நேரத்தில் அவருக்கு பதிலாக ஒருவர் அதிபர் பொறுப்பை மற்றொருவர் கவனித்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.
சுமார் 250 ஆண்டுகால அமெரிக்க அதிபர் வரலாற்றில், இதுவரை எந்தப் பெண்ணும் அமெரிக்க அதிபராக பதவி வகித்ததில்லை.
ஆக, சிறிது நேரமே கமலா ஹாரிஸ் அதிபர் பொறுப்பை வகித்தாலும், முதல் அமெரிக்கப் பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மேலும், இதுவரை எந்தப் பெண்ணும் அமெரிக்க துணை அதிபராகவும் இருந்ததில்லை. கமலா ஹாரிஸுக்குத்தான் முதல் அமெரிக்க துணை அதிபர் என்ற பெருமை கிடைத்துள்ள நிலையில், தற்போது அவர் முதல் அமெரிக்கப் பெண் அதிபர் என்ற பெருமையையும் பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.