தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்த கமல்ஹாசன்! புகைப்படங்கள்
தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று அதன் தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக வரும் 7ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளார்.
இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யமும் போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கில் தோல்வியடைந்தார். இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ?❤️?? pic.twitter.com/xUgyoR6Gae
— சீ.பாலாஜி (@BalajiSvasan05) May 4, 2021
இந்நிலையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் கமல் நேரில் சந்தித்து வாழ்த்து கூற வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கூட்டத்துக்குக் கிளம்புவதைச் சற்று நேரம் ஒத்திவைத்து கமல் வருகைக்காக ஸ்டாலின் காத்திருந்தார்.
கமல் வந்தவுடன் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். கமல்ஹாசனை ஸ்டாலின் வரவேற்றார். அவருக்கு கமல் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவருடன் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார். பின்னர் கமல்ஹாசன் கிளம்பினார். அவரை வாசல்வரை வந்து உதயநிதி ஸ்டாலின் வழியனுப்பினார்.