நடிகர் கமல்ஹாசன் பெண் குரலில் பாடி பிரபலமான பாடல்கள்.., எது தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கமல்ஹாசன் 233 படங்களில் நடித்திருக்கிறார்.
சினிமா மட்டுமின்றி உலக விஷயங்கள் அனைத்தையுமே விரல் நுனியில் வைத்திருப்பவர்.
பள்ளி கல்வி முடிக்காத ஒருவர் இவ்வளவு அறிவோடு இருக்கிறார் என்பது பலரும் ஆச்சரியப்படும் ஒரு விடயம்.
இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமையாளராக வலம் வருகிறார்.
சினிமாவில் பல்வேறு புதுமைகளை புகுத்துவதிலும் கமல் தொடர்ந்து முனைப்பு காட்டி வந்துள்ளார்.
இவருக்கு நடிப்புக்கு இணையாக இசையின் மீதும் ஆர்வம் அதிகம். இவர் குரலில் வெளியான பெரும்பாலான பாடல்கள் பிரபலமாகியுள்ளன.
அந்தவகையில் கமல்ஹாசன் தன்னுடைய குரலை மாற்றி, அதாவது பெண் குரலில் பாடி பிரபலமான பாடல்கள் சில இருக்கின்றன.
கமல், முதன்முதலில் பெண் குரலில் பாடியது அவ்வை சண்முகி படத்தில் தான்.
கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான, தேவா இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற ருக்கு ருக்கு பாடலை சுஜாதா மோகன் உடன் இணைந்து பாடி இருந்தார் கமல்ஹாசன்.
அந்த பாடலில் அவ்வை ஷண்முகி கதாபாத்திரம் பாடும்படி சில வரிகள் இருக்கும். அதற்காக தன்னுடைய குரலை மாற்றி பெண் குரலில் பாடி அசத்தி இருப்பார் கமல்.
அதேபோல் கமல்ஹாசன் பெண் குரலில் பாடிய மற்றொரு பாடல் தசாவதாரம் படத்தில் இடம்பெற்றது.
இப்படத்தில் முகுந்தா முகுந்தா பாடலில் மூதாட்டி வேடத்தில் வரும் கமல்ஹாசன் பாடுவது போல் சில வரிகள் இருக்கும்.
அந்த வரிகளை ஒரு மூதாட்டி பாடினால் எப்படி இருக்குமோ அதே போல் தத்ரூபமாக பாடி கமல்ஹாசன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |