நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே: டி.ராஜேந்தரின் புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் கமல்ஹாசன்
நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நலமுடன் திரும்பி வாருங்கள் என நடிகர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அவரின் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாகவும், வயிற்றுப்பகுதியில் ரத்தக்கசிவு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்காக சிகிச்சை மேற்கொள்ள அவர் அமெரிக்கா சென்று சில நாட்களில் திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் டி.ராஜேந்தர் மற்றும் அவரது இளைய மகன் குறளரசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன் நலமுடன் திரும்பி வரும் சகோதரரே என குறிப்பிட்டுள்ளார்.
நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே!#TRajendar pic.twitter.com/TyTrNh4dhX
— Kamal Haasan (@ikamalhaasan) June 14, 2022
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        