பிக்பாஸ் 5-ல் கமல் அணியப்போகும் ஆடை எல்லாம் இப்படி தான் இருக்கும்! நடிகை அம்ரிதா ராம் சொன்ன ரகசியம்
பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கொரோனா காலம் என்பதால் இந்த முறையும் ஷூட்டிங் தாமதமாக தான் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ ஷூட்டிங்கில் கமல் கலந்து கொண்டு நடிக்க தொடங்கிவிட்டார்.
இந்த முறை ஆண்டவர் எந்த லுக்கில் கலக்கபோகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். அனைத்து பிக் பாஸ் சீசனிலும் கமலுக்கு ஆடை வடிவமைத்து கொடுத்தவர் அம்ரிதா ராம்.
அவர் இந்த முறை கமலின் புதிய லுக் குறித்து பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். இதில் அவர் கூறியது, இந்த முறை சாருக்கு கதர் ஆடைகளை தான் பெரும்பாலும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம். அவர் நான் பல படங்களில் நடித்துவிட்டேன்.
அதனால் படங்களின் சாயலில் ஆடை இருக்க கூடாது என்று தெளிவாக கூறிவிட்டார். அதனால் நாங்கள் அவருக்கு பார்த்து பார்த்து டிசைன் செய்துள்ளோம். அவருக்காக எல்லா அடைகளுமே கஸ்டமைஸ் செய்யப்பட்டது தான். ஆனால் டி-ஷர்ட் மட்டும் கடைகளில் வாங்குவோம் மற்றபடி நாங்கள் தான் டிசைன் பண்ணினோம்.
ஆடை டிசைன் செய்ததில் முழு சுதந்திரத்தை கமல் சார் எனக்கு கொடுத்தார். ஆடையை அடுத்து அவர் ஷூவில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்துவோம். ஏனென்றால் கமல் சார் எபிசோடு முழுவதும் நின்று கொண்டு தான் தொகுத்து வழங்குவார் என்பதால் நாங்கள் ஆடைக்கு பிறகு ஷூவில் தான் எங்கள் கவனம் இருக்கும்.
ஸ்கிரீன்ல பார்க்க லைட்டாவும், அதே நேரத்தில் கூல் லுக்காகவும் தெரியுற மாதிரியான ஆடைகளைத்தான் ரெடி பண்ணியிருக்கோம். கதர்னு சொன்னதும் முழுக்க, முழுக்க கதர் மட்டும் தான்னு நினைக்க வேண்டாம். அதை ஒரு பேஸா எடுத்துக்கிட்டுதான் டிசைன் பண்ணியிருக்கோம்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5இல் கமல் சாரை ஐரோப்பியன் லுக்கில் பார்க்கலாம் என்று அமிர்தா தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தீவிர ரசிகர்கள் கமல்ஹாசனை புதிய லுக்கில் காண காத்து கொண்டிருக்கின்றனர்.