சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கமல்.. கொரோனா தொற்று குறித்து அவரே கூறிய தகவல் இதோ!
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மக்கள் நீதி மய்யம், மற்றும் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் கமல்ஹாசன். இவர் தற்போது இந்தியன் 2 திரைப்படம் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அமெரிக்கா சென்றார். இதையடுத்து சென்னை திரும்பிய பிறகு அவருக்கு இருமல் இருந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பரிசோதனை செய்ததில் கடந்த 22ஆம் திகதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.
முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன். pic.twitter.com/IScdLsBjOL
— Kamal Haasan (@ikamalhaasan) December 4, 2021
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ள கமல் தான் நோய் தொற்றிலிருந்து குணமாகி பணிக்கு திரும்பியுள்ளதாகவும், தனக்காக பிராத்தனை செய்த ரசிகர்கள் மற்றும் சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.