நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான பரிசோதனைக்காக அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படவுள்ளது. பரிசோதனை முடிந்து இன்று மாலையே கமல்ஹாசன் வீடு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 22ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்று விட்டு திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.