அதற்கு இடையூறாக யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன்! கமல்ஹாசன்
இந்தி மொழி சர்ச்சை குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழுக்கு இடையூறாக யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன் என தெரிவித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இதில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், இந்தி மொழி குறித்த சர்ச்சை விடயத்தில் தனது கருத்தை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை. அதற்கு இடையூறாக யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன். இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. தாய் மொழியை விட்டுடாதீங்க. இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை, ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை. இந்தியாவின் அழகு அதன் பன்முகத்தன்மை' என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ரஜினிகாந்தைப் போல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு நண்பர் என்று கூறினார்.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        