காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடக்கம்.., மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
காமராஜர் காலை உணவுத் திட்டம்
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என பெயரிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெற உள்ளனர்.
இதற்காக 2026-27 நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலை உணவுத் திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
Just look at the pure happiness & excitement on that little boy’s face when #Vijay Anna sat next to him. ❤️
— Pikachu 💫 (@Manju_thoughts) September 22, 2026
The way he excitedly waved his hands at him… U can literally feel how much this moment meant to him. ♥️ pic.twitter.com/TIqrVU9kac
மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிய அவர், அவர்களுடன் அமர்ந்து உணவும் சாப்பிட்டார். முதல் நாள் காலை உணவாக சாம்பார், வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் ரவா உப்புமா கிச்சடி, சேமியா உப்புமா, காய்கறி கிச்சடி, காய்கறி அரிசி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் சாதம், இனிப்பு பொங்கல், சேமியா கேசரி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தில் மேலும் புதிய உணவு வகைகளைச் சேர்ப்பது தொடர்பாக தமிழக அரசு குழு அமைத்துள்ளது.