பத்தாம் வகுப்பில் திருமணம்! வாழ்க்கையை புரிந்து கொள்வதற்குள் 2 குழந்தைகள்... தனி ஒருவராக சாதித்த பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் நடிகை
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, தேன்மொழி பி.ஏ போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர் கம்பம் மீனா.
வட்டார மொழியில் அழகாக பேசுவது தான் மீனாவின் சிறப்பு. சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்து இளம் வயதில் பல்வேறு சிரமங்களை கடந்தே இன்று அனைவருக்கும் தெரியும் பிரபலமாக மாறியிருக்கிறார் மீனா.
பாரதிராஜாவால் தெற்கத்தி பொண்ணு சீரியலில் அறிமுகப்படுத்தப்பட்ட கம்பம் மீனா உண்மையில் மிகவும் துணிச்சலான பெண்.
மீனா பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. வாழ்க்கை குறித்த புரிதல் தெரிவதற்குள் 2 குழந்தைகள். கணவருக்கு உதவ, எல்.ஐ.சி ஏஜெண்டானார்.
கம்பம் சுற்று வட்டாரத்தில் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம். இளமையிலேயே நன்கு உழைக்க ஆரம்பித்தார். 2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா தெற்கத்திபொண்ணு சீரியலை தேனி மாவட்டத்தில் எடுத்துக் கொண்டிருந்த போது கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்க மீனா தேர்வானார்.
அங்கிருந்து தான் மீனாவின் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. மீனா சீரியல்கள் மட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார்.