உடலின் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் கம்பு தோசை.., இலகுவாக செய்வது எப்படி?
முழு தானியமான கம்பில் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய பல நன்மைகள் நிறைந்துள்ளன.
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலின் கெட்ட கொழுப்பு குறையும், உடல் வலிமையாகும். மேலும் தோல் ஆரோக்கியத்துக்கும், கண்பார்வைக்கும் நல்லது.
அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த சுவையான கம்பு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கம்பு- 1 கப்
- இட்லி அரிசி- 1 கப்
- உளுந்து- ¼ கப்
- வெந்தயம்- ¼ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பு, இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து 2- 3 முறை நன்கு கழுவிக்கொள்ளவும்.
பின் இதில் தண்ணீர் சேர்த்து 8 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் மூடி போட்டு அப்படியே வைத்தால் மாவு நன்கு புளித்து வந்துவிடும்.
இறுதியாக அடுப்பில் தோசை தவா வைத்து அரைத்த மாவை ஊற்றி நல்லெண்ணெய் விட்டு வேகவைத்து எடுத்தால் சத்தான கம்பு தோசை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |