உடல் வலுவிற்கு இந்த ஒரே ஒரு லட்டு போதும்: எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு இனிப்பு வகை இந்த கம்பு லட்டு.
உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கம்பில் நிறைந்துள்ளது.
அந்தவகையில், ஆரோக்கியமான கம்பு லட்டு வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கம்பு மாவு- 2 கப்
- வெல்லம்- 2 கப்
- பாதாம்- 10
- ஏலக்காய்- 10
- பிஸ்தா- 10
- முந்திரி- 10
- திராட்சை- 10
- நெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் உருண்டை வடிவில் இந்த மாவை பிடித்து பின், ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இந்த கம்பு மாவை பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
சிறிது நேரம் கழித்து சூடு ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் நெய் ஊற்றி பாதாம், முந்திரி, திராட்சை, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் இப்போது பாதாம் பிஸ்தா முந்திரி ஏலக்காய் அனைத்தையும் சேர்த்த பொடிதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் அதே கடாயில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி எடுக்க வேண்டும்.
அடுத்து இதில் அரைத்து வைத்த கம்பு மாவு மற்றும் பொடித்த பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சை ஏலக்காய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
கடாயில் இந்த கலவை அடி பிடிக்காத வரை நன்று கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இப்போது இந்த மாவு கெட்டியாகி வந்தவுடன் கையில் சூடு பொறுக்கும் வரை சிறு லட்டுகளாக பிடித்து வைத்துக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |