உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான கம்பு ரொட்டி.., எப்படி செய்வது?
Kambu roti recipe- கம்பு என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த பாரம்பரிய சிறுதானியம் ஆகும்.
இது உடல் எடையைக் குறைக்கவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், மற்றும் உடல் சூட்டை தணித்து ஆற்றலைத் தரவும் உதவுகிறது.
கம்பில் உடலிற்கு நன்மைகள் வழங்கும் பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த கம்பில் ரொட்டி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- கம்பு மாவு- 1 கப்
- உப்பு- ¼ ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- சுடு தண்ணீர்- 1 கப்
- நெய்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் கம்பு மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து பிணைந்துக்கொள்ளவும்.
பின் இதில் சிறிது சிறிதாக சுடு தண்ணீர் சேர்த்து நன்கு பிணைந்துக்கொள்ளவும்.

அடுத்து இதனை மூடி போட்டு 20 நிமிடம் ஊறவிட்டு வட்டமாக தேய்த்துக்கொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் தவா வைத்து சூடானதும் தேய்த்த மாவை சேர்த்து நெய் சேர்த்து சுட்டு எடுத்தால் சுவையான கம்பு ரொட்டி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |