இலங்கையின் கமில் மிஷாரா 108 நாட்அவுட்: ஜாஃப்னா கிங்ஸ் 242 ஓட்டங்கள் குவிப்பு
LPL 2026 தொடரின் காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 242 ஓட்டங்கள் குவித்தது.
ஜாஃப்னா கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான கமில் மிஷாரா 55 பந்துகளில் 108 ஓட்டங்கள் விளாசினார்.
கமில் மிஷாரா வாணவேடிக்கை
ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கல்லன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான LPL 2026 போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
Kamil Mishara brings up a breathtaking maiden T20 century to put Jaffna Kings in a commanding position 💯🔥#LPL2026 pic.twitter.com/MZkv0SU7Pk
— ThePapare (@ThePapareSports) August 5, 2026
முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணியில் அவிஷ்கா பெர்னான்டோ 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கவாஜா நபாஃய் அதிரடி காட்ட, கமில் மிஷாரா (Kamil Mishara) வாணவேடிக்கை காட்டினார்.
242 ஓட்டங்கள்
அரைசதம் விளாசிய கவாஜா நபாஃய் (Khawaja Nafay) 32 பந்துகளில் 54 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்திய கமில் மிஷாரா சதம் விளாசினார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த டௌஹித் ஹ்ரிடோய் அரைசதம் அடிக்க, ஜாஃப்னா கிங்ஸ் அணி 242 ஓட்டங்கள் குவித்தது.
கமில் மிஷாரா 55 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்களும், ஹ்ரிடோய் 21 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்களும் விளாசினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |