கமில் பூரன் ருத்ரதாண்டவம்: நொறுங்கிய ஆந்த்ரே ரஸலின் அணி
கரீபியன் டி20 போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி, ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை வீழ்த்தியது.
செயின்ட் லூசியாவில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தியது.
கார்ட்டி 50 ஓட்டங்கள்
ஜமைக்கா கிங்ஸ்மென் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான கரீபியன் டி20 போட்டி நேற்று நடந்தது.
முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் 169 ஓட்டங்கள் குவித்தது. கேசி கார்ட்டி 50 ஓட்டங்கள் எடுத்தார். மேத்யூ ஃபோர்டே 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கமில் பூரன் ருத்ரதாண்டவம்
பின்னர் ஆடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணியில் கமில் பூரன் (Kamil Pooran) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
பியனார் மற்றும் பூரனின் அதிரடி ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் 18.2 ஓவர்களில் 171 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இறுதிவரை களத்தில் கமில் பூரன் 49 பந்துகளில் 81 ஓட்டங்கள் (5 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) விளாசினார். பியனார் 14 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |