முத்தரப்பு இறுதிப்போட்டி: பாகிஸ்தானுக்கு எதிராக 131 ஓட்டங்கள் விளாசிய இலங்கை வீரர்
Kamindu mendis maiden odi century: பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் கமிந்து மெண்டிஸ் 131 ஓட்டங்கள் விளாசினார்.
கமிந்து மெண்டிஸ் பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் 131 ஓட்டங்கள் விளாச, இலங்கை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ஓட்டங்கள் குவித்தது.
முத்தரப்பு இறுதிப்போட்டி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு இறுதிப்போட்டி லாகூரில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ 38 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 8 ஓட்டங்களை அவுட் ஆகினார்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis), பவன் ரத்நாயக்கவுடன் கைகோர்க்க இலங்கை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தினை கமிந்து மெண்டிஸ் பதிவு செய்தார்.
கமிந்து மெண்டிஸ் சதம்
அணியின் ஸ்கோர் 41.1 ஓவர்களில் 255 ஓட்டங்களாக உயர, ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழந்தார்.
128 பந்துகளை எதிர்கொண்ட கமிந்து மெண்டிஸ் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 131 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் ஷானக 17 ஓட்டங்களில் வெளியேற, அரைசதம் விளாசிய பவன் ரத்நாயக்க (Pavan Rathnayake) 77 (65) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ஓட்டங்கள் குவித்தது. ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, சல்மான் அகா மற்றும் ஹாரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
