39 பந்துகளில் 88 ஓட்டங்கள்: சரவெடி காட்டிய கமிந்து மெண்டிஸ்..கொழும்பு கேப்ஸ் அபாரம்
லங்கா பிரீமியர் லீக்கில் கொழும்பு கேப்ஸ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தம்புள்ளை சிக்ஸர்ஸை வீழ்த்தியது.
ஹெர்மன், கமிந்து மெண்டிஸ்
தம்புள்ளையில் நடந்த LPL 2026 தொடரின் 12வது போட்டியில், கொழும்பு கேப்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய கொழும்பு கேப்ஸ் அணியில் ரூபின் ஹெர்மன் (Rubin Hermann) 24 பந்துகளில் 39 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டிய அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis, 39 பந்துகளில் 88 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள்) விளாசினார்.

கொழும்பு கேப்ஸ் வெற்றி
இதன்மூலம் கொழும்பு கேப்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் குவித்தது. தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது.

எனினும் பவன் ரத்னாயகே (Pavan Rathnayake) அதிரடியாக 33 பந்துகளில் 50 விளாசினார்.
மார்க்யூஸ் அக்கர்மன் 40 ஓட்டங்களும், குல்பதின் நைப் 28 (13) ஓட்டங்களும் எடுக்க, தம்புள்ளை சிக்ஸர்ஸ் 20 ஓவர்கள் 176 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |