டான் பிராட்மேனையே முந்திய இலங்கையின் இளம் வீரர்! டெஸ்டில் அசுரவேக ஆட்டம்
இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் 5 டெஸ்ட்களில் 600க்கும் மேல் ஓட்டங்கள் குவித்து டான் பிராட்மேனை முந்தியுள்ளார்.
கமிந்து மெண்டிஸ்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 196 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஆனால், இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் 120 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.
இது அவர் விளையாடும் 5வது டெஸ்ட் போட்டியாகும். அதற்குள் 627 ஓட்டங்கள் குவித்து, தலைசிறந்த கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேனையே (607) முந்தியுள்ளார் மெண்டிஸ்.
இதற்கு முன்பு சுனில் கவாஸ்கர், ஜார்ஜ் ஹெட்லி, ஹாரி புரூக் போன்ற வீரர்கள் இந்த சாதனையை செய்திருந்தனர். அவர்கள் வரிசையில் 7வது வீரராக கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) இணைந்துள்ளார்.
இன்னும் ஒரு இன்னிங்ஸ் மீதமுள்ள நிலையில், ஏனைய வீரர்களையும் மெண்டிஸ் முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமிந்து மெண்டிஸ் இதுவரை 8 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள், 3 அரைசதங்களுடன் 627 ஓட்டங்கள் குவித்துள்ளார். ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 164 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
முதல் 5 டெஸ்ட்களில் 600 ஓட்டங்கள் குவித்தவர்கள்
- சுனில் கவாஸ்கர் - 831
- ஜார்ஜ் ஹெட்லி - 714
- கமிந்து மெண்டிஸ் - 627
- ஹரி புரூக் - 623
- டெவோன் கான்வே - 623
- கான்ராட் ஹண்டே - 622
- டான் பிராட் மேன் - 607
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |