சதம் விளாசி இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்ட வீரர்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி வீரர் கமிந்து மெண்டிஸ் 113 ஓட்டங்கள் விளாசினார்.
கமிந்து மெண்டிஸ் சதம்
ஓல்டு டிராஃபோர்டில் நடந்து வரும் டெஸ்டில் இலங்கை அணி 122 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
95 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, மேத்யூஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Kamindu's ? extends Sri Lanka's lead ?
— England Cricket (@englandcricket) August 24, 2024
Catch Up: https://t.co/3J9ouQuVTn ?
??????? #ENGvSL ?? #EnglandCricket pic.twitter.com/45pdNUxr6Y
மேத்யூஸ் 65 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) 3வது டெஸ்ட் சதம் அடித்தார்.
சண்டிமல் 79
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 113 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் தினேஷ் சண்டிமல் அபாரமாக ஆடி 79 ஓட்டங்கள் எடுக்க, இலங்கை அணி 326 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இங்கிலாந்து அணியின் தரப்பில் கிறிஸ் வோக்ஸ், மேத்யூ போட்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், அட்கின்சன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
A dream start for Kamindu Mendis in his Test career! ✨??#KaminduMendis #SriLanka #ENGvSL #Sportskeeda #Tests pic.twitter.com/0Cf8PrRYxu
— Sportskeeda (@Sportskeeda) August 24, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |