இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் மிரட்டல்! அதிவேகமாக 1000 ஓட்டங்கள் கடந்து சாதனை
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வேகமாக 1000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற பெருமையை இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார்.
கமிந்து மெண்டிஸின் அடுத்தடுத்த சாதனை
இலங்கை கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து புதிய சாதனைகளை படைத்து வருகிறார்.
கமிந்து மெண்டிஸ் தொடர்ச்சியாக 8 டெஸ்ட் ஆட்டங்களில் அரைசதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், கனிந்து மெண்டிஸ் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் 182 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வேகமாக 1000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக 1000 ஓட்டங்களை கடந்த வீரர்கள் பட்டியலில், அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் சமன் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |