CSKவை உறைய வைத்த கேட்ச்! விக்கெட், அதிரடி ஆட்டம்..மொத்தமாக முடித்த கமிந்து மெண்டிஸ்(வீடியோ)
இலங்கையின் கமிந்து மெண்டிஸ் நேற்றையப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து SRH அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
கமிந்து மெண்டிஸ்
ஐபிஎல் 2025யின் 43வது லீக் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 154 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
That was Perfect Delivery from Kamindu Mendis #CSKvsSRH
— Kavya Maran (@Kavya_Maran_SRH) April 26, 2025
pic.twitter.com/tdqYo5lDjd
21 ஓட்டங்கள் எடுத்திருந்த ரவீந்திர ஜடேஜாவின் விக்கெட் கமிந்து மெண்டிஸ் கைப்பற்றினார். அவர் ஜடேஜாவை கிளீன் போல்டாக்கினார்.
துடுப்பாட்டத்திலும் மிரட்டல்
அத்துடன் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சிதறடித்த டெவல்ட் பிரேவிஸ் 42 (25) ஓட்டங்களில் இருந்தபோது, ஹர்ஷல் படேல் ஓவரில் அடித்த ஷாட்டை, கமிந்து பறந்து மிரட்டலாக கேட்ச் செய்தார். இந்த கேட்ச் CSK ரசிகர்களை உறைய வைத்தது.
This Catch Changed the entire momentum for CSK 💔
— Raz (@RazanAhamed6) April 25, 2025
Kamindu Mendis 💔#IPL2025 #CSKvsSRH pic.twitter.com/AszqHisbSn
பீல்டிங், பந்துவீச்சில் மிரட்டிய கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) துடுப்பாட்டத்திலும் கலக்கினார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துரத்தலின்போது, கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் விளாசினார்.
THE CATCH OF THE IPL 2025 CONTENDER - KAMINDU MENDIS..!!!
— MANU. (@IMManu_18) April 25, 2025
- Dewald Brevis..!!
pic.twitter.com/ViS7WzleLv
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |