முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த வீரர்! மைதானத்தில் பறந்த சிக்ஸர்கள்
ஜிம்பாப்பே அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் முதல் சர்வதேச சதம் விளாசினார்.
பாகிஸ்தான், ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, புலவாயோவின் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாடியது. சைம் அயூப் 31 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அப்துல்லா ஷஃபிக் அரைசதம் அடித்து (50) வெளியேறினார்.
கம்ரான் குலாம் (Kamran Ghulam) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணித்தலைவர் முகமது ரிஸ்வான் 47 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
ரிஸ்வான், குலாம் கூட்டணி 89 ஓட்டங்கள் குவித்தது. கம்ரான் குலாம் 99 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 103 ஓட்டங்கள் குவித்தார். இது அவருக்கு முதல் சர்வதேச ஒருநாள் சதம் ஆகும்.
பின்னர் வந்த அகா சல்மான் 26 பந்துகளில் 30 ஓட்டங்கள் விளாசினார். டையப் தாஹிர் அதிரடியாக 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் விளாச, பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 303 ஓட்டங்கள் குவித்தது.
ஜிம்பாப்பே தரப்பில் சிக்கந்தர் ரஸா, ங்கரவா தலா 2 விக்கெட்டுகளும், முஸரபாணி மற்றும் ஃபராஸ் அக்ரம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Kamran Ghulam steps up with a brilliant maiden ton to lift Pakistan to 303-6! 🏏
— Pakistan Cricket (@TheRealPCB) November 28, 2024
Over to the bowlers after the break ☄️#ZIMvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/0sHRrCnue9
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |