அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர்! கம்ரான் குலாம் படைத்த சாதனை
பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் விளாசிய 13வது வீரர் என்ற பெருமையை கம்ரான் குலாம் படைத்துள்ளார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதல்
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது.
From handing out the Test debut cap to being there for the 💯 moment 🫂@KamranGhulam7 🤝 @iMRizwanPak#PAKvENG
— Suyog Warke🇮🇳 (@suyog_warke) October 15, 2024
pic.twitter.com/qNcGK0RXCY
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாளான இன்று 90 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 259 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
13வது வீரர்
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு முதல் முறையாக களமிறங்கிய கம்ரான் குலாம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.
இதன் மூலம் கம்ரான் குலாம் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் விளாசிய 13வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Big moment for Kamran Ghulam as he hits a FOUR to bring up his maiden Test century! 💯#PAKvENG | #TestAtHome pic.twitter.com/beA8rpCl68
— Pakistan Cricket (@TheRealPCB) October 15, 2024
கம்ரான் குலாம் 118 ஓட்டங்கள் குவித்து இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் நிறைவடைய 5 ஓவர்களே மீதமிருந்த போது தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
இந்நிலையில் தற்போது முகமது ரிஸ்வான் 37 ஓட்டங்களுடனும் மற்றும் ஆகா சல்மான் 5 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து பந்துவீச்சு சார்பில் ஜேக் லீச் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |