நடிகை கனகாவின் தனிமைக்கு அந்த நபர் தான் காரணமாம்: வெளியான அதிரவைக்கும் தகவல்கள்
நடிகை கனகாவின் தனிமைக்கு அந்த நபர் தான் காரணம் என்று சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை கனகா
பழம் பெரும் நடிகையாக வலம் வந்தவர் தேவிகா. இவர் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன் உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். இவரின் ஒரே மகள் தான் நடிகை கனகா.
1989ம் ஆண்டு இயக்குநர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான 'கரகாட்டக்காரன்' படத்தில் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார். இப்படம் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இப்படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி, செந்தில் நகைச்சுவையில் வாழைப்பழ காமெடி வசனம் இன்று வரை மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தையடுத்து, கனகா ரஜினி, கமல், சத்யராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் இவர் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை கனகா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் கனகாவா இது. இப்படி ஆளே மாறிவிட்டாரே என்று அதிர்ச்சியில் உறைந்தனர்.
கிட்டதட்ட நடிகை கனகா 20 வருடங்களாக வெளியுலகத்திற்கு வராமல் வீட்டிலேயே கிடந்தார். அப்பாவுடன் ஏற்பட்ட பிரச்சினை, கைவிட்ட கணவன் கைவிட்டதாலும், காதல் தோல்வியால் அவர் வீட்டிலேயே முடங்கிவிட்டார். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறப்பட்டது
அந்த நபர் தான் காரணம்?
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் நடிகை கனகா பற்றி ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை தேவிகா மூலம் சினிமா வாய்ப்பை பெற்ற ராமச்சந்திரன் என்பவர் நடிகை கனகாவிற்கு பிஏவாக இருந்து வந்தார். இவர் கனகாவை மனஅழுத்தத்திலிருந்து மீட்டார். ராமச்சந்திரன் கனகாவிடம் தன்னுடைய காதலை சொல்லாமல், அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
இது தெரியாமல், திடீரென்று நாள் நடிகை கனகா இவரை திட்டி வீட்டை விட்டு வெளியில் அனுப்பியுள்ளார். சில ஆண்டுகளுக்கு பிறகு ராமச்சந்திரன் இறந்து விட்டார்.
அதன் பிறகுதான், ராமச்சந்திரன் ஒருதலையாக காதலித்தது கனகாவிற்கு தெரியவந்தது. இதனால், மீண்டும் மனமுடைந்த கனகா சினிமாவே வேண்டாம் என்று வீட்டில் முடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.