நடிகர் ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா திரைப்படத்தில் இணைந்து நடித்த பிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை!
நடிகர் ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா 3 படத்தில் நடித்த ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ரா ஜாவி கோவாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
24 வயதான அலெக்ஸாண்ட்ரா ஜாவி கோவாவில் உள்ள வாடகை குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவர் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் இவர் நடித்திருந்தார்.
அந்த படத்தில் ரோஸி எனும் கதாபாத்திரத்தில் இவர் பிளாஸ்பேக் காட்சிகளில் நடித்திருந்தார். காஞ்சனா 3 திரைப்படம் வெளியான அதே ஆண்டு சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்க அந்த புகைப்படக் கலைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்போது அந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது. ரஷ்ய நடிகையும் மாடல் அழகியுமான இவர் தொடர்ந்து கோவாவில் தனது காதலருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழனன்று திடீரென வாடகை வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் அவர் இறந்து கிடந்த தகவல் தெரியவந்ததும் கோவா பொலிசார் அவரது உடலை மீட்டு பம்போலிம் எனும் இடத்தில் உள்ள கோவா மெடிக்கல் காலேஜில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.
அதே வியாழன் அன்று இன்னொரு ரஷ்ய பெண்ணும் மர்மமான முறையில் ஆக்சல் வாடகை வீட்டில் இறந்து கிடந்த தகவல் கிடைத்து அந்த பெண்ணையும் மீட்டு அதே மருத்துவமனையில் வைத்திருப்பதாக பொலிஸ் அதிகாரி சுராஜ் கவாஸ் தெரிவித்துள்ளார்.
இரு மரணங்களுக்கு இடையே ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அல்லது தற்செயலாக நடந்த தற்கொலைகளா? என பல கோணங்களில் கோவா பொலிசார் இந்த விவாகாரத்தில் விசாரித்து வருகின்றனர்.