கோவில் பிரசாதம் காஞ்சிபுரம் இட்லி.., இலகுவாக செய்வது எப்படி?
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு நைவேத்தியமாக இந்த இட்லி வைக்கப்படுகிறது.
அந்தவகையில், கோவிலில் தரப்படும் அதே சுவையில் இந்த இட்லியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 2 கப்
- உளுந்து- 1 கப்
- தயிர்- 3 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- நெய்- 2 ஸ்பூன்
- முந்திரி- 10
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- ½ ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- இஞ்சி- 1 துண்டு
- பெருங்காயம்- ½ ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- சுக்கு பொடி- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் அரிசி மற்றும் உளுந்தை 2 முறை நன்கு கழுவி தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இந்த மாவில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் மூட்டி போட்டு புளிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் நெய்யை சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து மாவில் சேர்க்கவும்.
அடுத்து அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, நுணுக்கிய மிளகு, நுணுக்கிய சீரகம், நறுக்கிய இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் சுக்கு பொடி சேர்த்து தாளித்து மாவில் சேர்க்கவும்.
இறுதியாக இந்த மாவை இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |