பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் காஞ்சிபுரம் ஸ்பெஷல் இட்லி செய்வது எப்படி?
காஞ்சிபுரத்தில் இந்த இட்லி தோன்றியதால் அங்கு புகழ்பெற்று விளங்கும் இட்லியை காஞ்சிபுரம் இட்லி என்று அழைக்கப்படுகிறது.
இந்த இட்லியில் மிளகு, சீரகம் ,இஞ்சி சேர்த்து செய்யப்படுகின்றன.
இதை தொன்னையில் செய்யப்படுவதால் இட்லியின் வடிவமும், மணமும் வித்யாசமாக இருக்கும்.
காஞ்சிபுரம் இட்லியுடன் சட்னி, சாம்பார், இட்லி பொடி என அனைத்திற்கும் சூப்பரான காமினேஷனாக இருக்கும்.
வழக்கமாக செய்யப்படும் இட்லி மாவிலேயே இந்த காஞ்சிபுரம் இட்லியை செய்யலாம். காலை மற்றும் இரவு உணவாக இதை எடுத்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி – 1 கப்
- இட்லி அரிசி – 1 கப்
- உளுந்து – அரை கப்
- உப்பு - தேவையான அளவு
- உடைத்த மிளகு – 2 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- இஞ்சிப்பொடி – 1 ஸ்பூன்
தாளிக்க
- நல்லெண்ணெய் – 1 டேபிள்
- ஸ்பூன் கடுகு – 1 ஸ்பூன்
- உளுந்து – 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை – 2 கொத்து
- முந்திரி – 10 (உடைத்தது)
- பெருங்காயம் – சிறிதளவு
padhuskitchen
செய்முறை
வழக்கமான முறையில் இட்லிக்கான அரிசி, உளுந்தை நன்றாக ஊறவைத்து, மாவாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
உப்பு சேர்த்து கலந்து வைத்து, 6 முதல் 10 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.புளித்து, பொங்கிய மாவை நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.
அதில் பொடித்த மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
இதனைத்தொடர்ந்து ஒரு தாளிப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, முந்திரி, பெருங்காயத்தை தாளித்து மாவில் கலந்துகொள்ள வேண்டும்.
இதை நீங்கள் இட்லி பாத்திரத்தில் சேர்த்து இட்லிகளாக வேகவைத்து எடுத்துக்கொண்டால் சுவையான காஞ்சிபுரம் ஸ்பெஷல் இட்லி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |