100வது டெஸ்டில் சொதப்பிய கேன் வில்லியம்சன்! 162 ரன்னுக்கு சுருண்ட நியூசிலாந்து
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்து அணி 162 ஓட்டங்களுக்கு சுருண்டது.
100வது டெஸ்ட்
கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி இன்னிங்சை தொடங்கியது.
வில் யங் 14 ஓட்டங்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து 38 ஓட்டங்கள் சேர்த்திருந்த டாம் லாதமும் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ரசிகர்களின் கரகோஷத்துடன் கேன் வில்லியம்சன் 100வது டெஸ்டில் களமிறங்கினார்.
Kane Williamson walks out to a warm reception from the Hagley Oval crowd in his 100th Test ? Follow play LIVE in NZ with @TVNZ+, DUKE and @SENZ_Radio. #NZvAUS #TimKane100 pic.twitter.com/3ZT6LY4GGn
— BLACKCAPS (@BLACKCAPS) March 7, 2024
மொத்தம் 37 பந்துகளை எதிர்கொண்ட அவர், 2 பவுண்டரிகளை விரட்டி 17 ஓட்டங்கள் எடுத்தபோது, ஹேசல்வுட் பந்துவீச்சில் lbw ஆனார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
162 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
அடுத்து களமிறங்கிய வீரர்கள் ஹேசல்வுட்டின் வேகத்தில் நடையை கட்டினர். இதனால் 107 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
எனினும் மேட் ஹென்றி, அணித்தலைவர் சௌதீ அணியை மீட்கப்போராடினர். எனினும் நியூசிலாந்து 162 ஓட்டங்களுக்கு சுருண்டது. மேட் ஹென்றி 29 (28) ஓட்டங்களும், சௌதீ 26 (20) ஓட்டங்களும் எடுத்தனர். ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா, முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்கள் எடுத்தது.
லபுசாக்னே 45 ஓட்டங்களுடனும், நாதன் லயன் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Stumps on Day 1 at Hagley Oval ? Matt Henry (3-39) leads with the ball in the third session. Head to https://t.co/3YsfR1YBHU or the NZC App for the full scorecard ? #NZvAUS pic.twitter.com/GHBvyeFUwg
— BLACKCAPS (@BLACKCAPS) March 8, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |