72 பந்தில் ODI சதம் விளாசிய கேன் வில்லியம்சன்: நியூசிலாந்து மிரட்டல் வெற்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சன் அதிரடி சதம் விளாசினார்.
ப்ரீட்ஸ்கீ 150
லாகூரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
இப்போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 304 ஓட்டங்கள் குவித்தது. ப்ரீட்ஸ்கீ 150 ஓட்டங்கள் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டிவோன் கான்வே (Devon Conway) 97 (107) ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
வில்லியம்சன் சதம்
எனினும் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் (Kane Williamson) அதிரடியாக 72 பந்துகளில் சதம் விளாசினார். இது அவரது 14வது ஒருநாள் சதம் ஆகும்.
அத்துடன் ஒருநாள் போட்டியில் இரண்டாவது அதிவேக சதமுமாகும். மேலும் 4.5 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் அவர் சதம் அடித்துள்ளார்.
நியூசிலாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கடைசி வரை களத்தில் நின்ற வில்லியம்சன் 113 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 133 ஓட்டங்கள் குவித்தார்.
க்ளென் பிலிப்ஸ் 32 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 28 ஓட்டங்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நியூசிலாந்து செய்த அதிகபட்ச சேசிங் ஸ்கோர் இதுவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |