இரண்டாவது குழந்தைக்கு தந்தையாவதால் கடைசி ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் கேப்டன்!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் கடைசி லீக் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான கேன் வில்லியம்சன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் ஐதராபாத் அணி 13 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ளது.
தனது கடைசி லீக் போட்டியில் மிகப்பெரிய ரன் ரேட்டில் வெற்றி பெற்றால், பிளேஆப் சுற்றில் நுழைய ஐதராபாத்துக்கு வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் கடைசி போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணியாக அவரது மனைவிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதால், வில்லியம்சன் அவருடன் இருக்க நியூசிலாந்துக்கு புறப்பட உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக கடைசி போட்டியில் புவனேஷ்வர்குமார் அல்லது திரிபாதி ஆகிய இருவரில் ஒருவர் அணிக்கு தலைமை ஏற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் நேற்று நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.