50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து வில்லியம்சன் விலகல்? ஷாக்கான ரசிகர்கள்
50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியிருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐபிஎல் முதல் தொடரில் அசத்திய குஜராத் டைட்டன்ஸ்
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 16வது ஐபிஎல் தொடர் சமீபத்தில் நேரு ஸ்டேடியத்தில் கோலாகமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியில் முதலில் துப்பாட்டம் செய்த சென்னை 178 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து, 179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் 19.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 182 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது. இதன் மூலம் சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அபார வெற்றி பெற்றது.
கேன் வில்லியம்சன் காயம்
இப்போட்டியில் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது, ருத்துராஜ் கெய்க்வாட் போட்டியின் 13வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தார்.
அப்போது பறந்து வந்த பந்தை பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த கேன் வில்லியம்சன் பிடித்து உள்ளே தூக்கி போட்டு பவுண்டரிக்கு வெளியே குதித்தார். அப்போது, அந்த பந்தை பிடிக்க முயற்சித்தபோது, வெளியே குதித்த கேன் வில்லியம்சனின் காலில் காயம் ஏற்பட்டு, எழுந்து நிற்கக்கூட முடியாமல் அங்கேயே படுத்துவிட்டார்.
இதனையடுத்து, பிசியோ அணியினர் மைதானத்திற்குள் ஓடி வந்தனர். கேன் வில்லியம்சனை பரிசோதனை செய்தனர். அவர் காலில் காயம் தீவிரமாக ஏற்பட்டதால் உடனடியாக அவரை அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர்.
ஆனால், கேன் வில்லியம்சன் நடக்க முடியாததால் தோளில் தாங்கியபடி வெளியே அழைத்துச் சென்றனர். இதனையடுத்து கேன் வில்லியம்சனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கேன் வில்லியம்சன் விலகல்
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்தியாவில் இந்தாண்டு நடக்க உள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் கேன் வில்லியம்சன் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வில்லியம்சன் விலகினால் டாம் லேதம் அணியை வழிநடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.