சக அணி வீரர் மோதியதால் 12 ஆண்டுகளில் முதல்முறையாக ரன்அவுட்! விரக்தியில் வெளியேறிய வில்லியம்சன் (வீடியோ)
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி 179 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கிரீன் 174
பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்டில், அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 383 ஓட்டங்கள் குவித்தது.
முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 279 ஓட்டங்கள் எடுத்திருந்த அவுஸ்திரேலியா, இன்று தனது ஆட்டத்தை தொடர்ந்தது.
ஹேசல்வுட் நங்கூரம்போல் நின்று ஆட, கேமரூன் கிரீன் (Cameron Green) சிக்ஸர்களை பறக்கவிட்டார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 174 ஓட்டங்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர், 23 பவுண்டரிகள் அடங்கும்.
After a brilliant day one century, Cameron Green revealed pre-New Zealand prep in the Sheffield Shield was “crucial” for him #NZvAUS pic.twitter.com/xwoMflSw4s
— cricket.com.au (@cricketcomau) February 29, 2024
மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளும், வில்லியம் ஓரௌர்கே மற்றும் குஃகெலேஜின் தலா 2 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
A coming-of-age innings!#NZvAUS pic.twitter.com/s1U2pnKjpX
— cricket.com.au (@cricketcomau) March 1, 2024
கேன் வில்லியம்சன் ரன்அவுட்
இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. லாதம் 5 ஓட்டங்களில் இருந்தபோது ஸ்டார்க் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் ஒரு ரன் எடுக்க ஓடியபோது, சக அணி வீரர் வில் யங் அவர் மீது மோதியதில் நிலைதடுமாறினார். இதனால் லபுஷேன் எளிதாக அவரை ரன் அவுட் செய்தார்.
The pressure is on New Zealand after Kane Williamson was run out - the first time in a Test Match since 2012
— TVNZ+ (@TVNZ) March 1, 2024
@BLACKCAPS v Australia: 1st Test | LIVE on DUKE and TVNZ+ pic.twitter.com/S9itasfaDg
வில்லியம்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் அவுட் ஆவது 12 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். அவர் ரன் எடுக்காமல் விரக்தியுடன் வெளியேறினார்.
அடுத்து வில் யங் 9 ஓட்டங்களில் மார்ஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து நியூசிலாந்தின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின.
கிளென் பிலிப்ஸ் அதிரடி
கிளென் பிலிப்ஸ் அதிரடியாக 70 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 71 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் கடைசி விக்கெட்டாக வெளியேறிய மேட் ஹென்றி, 34 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 179 ஓட்டங்களுக்கு சுருண்டது. நாதன் லயன் 4 விக்கெட்டுகளும், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து 204 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 13 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
Australia’s near-perfect day marred by loss of early wickets.#WTC25 | #NZvAUS ?: https://t.co/a0aVLM3SeK pic.twitter.com/LkfhrhluzH
— ICC (@ICC) March 1, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |