கேன் மாமாவின் பாடல்.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெளியிட்ட வீடியோ!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்கள் கேன் வில்லியம்சனுடன் இணைந்து பாடல் பாடிய வீடியோவை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்று 5வது இடத்தில் உள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான இந்த அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தாலும், அதற்கு அடுத்து நடந்த 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றுள்ளது.
இன்று இரவு நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் ஐதராபாத். இந்த நிலையில் ஐதராபாத் வீரர்களான அப்துல் சமாத், மார்க்கிராம் தங்கள் அணித்தலைவர் வில்லியம்சனுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளனர்.
அந்த வீடியோவில் வில்லியம்சன் கிட்டார் வாசிக்க, மற்ற வீரர்கள் தங்கள் அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் பாடுகின்றனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அணி நிர்வாகம், கேன் மாமா அண்ட் கோ-விடம் இருந்து சிறப்பான பாடல் என்று அதனுடன் குறிப்பிட்டுள்ளது.
The new #SRH band ?
— SunRisers Hyderabad (@SunRisers) April 22, 2022
A special song from Kane Mama and co. at SunRisers Got Talent ?#KaneWilliamson @AidzMarkram @glenndominic159 @ABDULSAMAD__1#OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/TsRRowiKI4