நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
கேன் வில்லியம்சன் 91 ஒருநாள் போட்டிகள் மற்றும் 75 டி20 போட்டிகளுக்கு நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருந்தார்.
2024-25 சீசனுக்கான தேசிய ஒப்பந்தத்திலிருந்தும் அவர் விலகினார்.
நியூசிலாந்து அணி கடந்த மூன்று டி20 உலகக் கோப்பைகளிலும் அரையிறுதிக்கு முன்னேறியது. 2021-இல் இறுதிப் போட்டியிலும் விளையாடியது.
ஆனால், தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து நியூசிலாந்து லீக் சுற்றிலேயே (group stage) வெளியேறியது.
இந்நிலையில், நியூசிலாந்தின் தற்போதைய T20I மற்றும் ODI கேப்டனான கேன் வில்லியம்சன், 2024-25க்கான தேசிய ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக கிட்டத்தட்ட 350 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள கேன், மூன்று வடிவங்களிலும் கிரிக்கெட்டைத் தொடர்வார்.
இதனிடையே, வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசனும் (Lockie Ferguson) தேசிய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Kane Williamson, New Zealand captain Kane Williamson, t20 world cup 2024