கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் திடீர் விலகல்! நியூசிலாந்தின் புதிய கேப்டன் இவர் தான்
நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து அணியின் மூன்று வித கிரிக்கெட்டிலும் கேப்டனாக இருப்பவர் கேன் வில்லியம்சன். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை 40 முறை கேப்டனாக செயல்பட்டுள்ள வில்லியம்சன், 22 வெற்றிகளை நியுசிலாந்து அணிக்கு பெற்று தந்துள்ளார்.
2016ஆம் ஆண்டில் பிரண்டன் மெக்கல்லத்திற்கு பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட வில்லியம்சன், அந்த காலக்கட்டத்தில் 11 சதங்கள் விளாசியிருந்தார்.
Twitter/@ICC
டெஸ்ட் பொறுப்பில் இருந்து விலகல்
இந்த நிலையில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து வில்லியம்சன் விலகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'கேப்டனாக இருப்பது களத்திற்கு வெளியேயும் அதிக பணிச்சுமையை தருகிறது. எனது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் இந்த முடிவுக்கான நேரம் சரியானது என்று நான் உணர்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
@Twitter
டெஸ்ட் பொறுப்பில் இருந்து விலகினாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வில்லியம்சன் கேப்டனாக தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கேப்டன் வில்லியம்சனுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். சௌதீ 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 347 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 7/64 ஆகும்.