பீல்டிங்கின்போது அடிபட்டதில் வலியால் கதறிய வீரர்..தேசிய அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு
நடப்பு ஐபிஎல் தொடரில் காயமடைந்த கேன் வில்லியம்சன், சிகிச்சைக்காக தனது நாட்டிற்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல்லில் வெளியேறிய கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக களமிறங்கினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங்கின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.
Brilliant Effort By Kane Williamson?#cskvsgt #IPL2023 #iplopeningceremony #KaneWilliamson pic.twitter.com/1SOHWf9tSD
— Tanay (@tanay_chawda1) March 31, 2023
இதனால் உடனடியாக மைதானத்தை விட்டு அவர் வெளியேறிய நிலையில், ஏனைய போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது.
சொந்த நாட்டிற்கு பயணம்
இந்த நிலையில் கேன் வில்லியம்சன் நியூசிலாந்துக்கு திரும்புவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக Blackcaps வெளியிட்டுள்ள பதிவில், 'குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான முழங்கால் காயத்தினால், கேன் வில்லியம்சன் வெளியேறியதைத் தொடர்ந்து, காயம் குறித்த பரிசோதனைக்காக நியூசிலாந்து திரும்புவார்.
அவர் அடுத்த வாரம் நியூசிலாந்து திரும்புவதற்கும், சிகிச்சைத் திட்டத்தை நிறுவுவதற்கு சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களால் பார்க்கப்படுவதற்கும், இப்போது ஆயத்தங்கள் நடந்து வருகின்றன' என தெரிவித்துள்ளது.
Following his release from the @gujarat_titans with a knee injury, Kane Williamson will return to NZ to have the injury further assessed. Preparations are now underway for him to return to NZ next week and be seen by relevant medical specialists to establish a treatment plan. pic.twitter.com/pbA5MJE0TI
— BLACKCAPS (@BLACKCAPS) April 2, 2023
தனது அபாரமான துடுப்பாட்டத்தினால் இறுதிவரை களத்தில் நின்று, அணியை வெற்றி பெற வைக்கும் வீரரான வில்லியம்சனின் வெளியேற்றம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாகும்.