தரையில் பட்ட பந்து! நடுவரின் மோசமான தீர்ப்பால் தலைகீழான போட்டியின் முடிவு... வெளியான வீடியோ
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் நடுவர் தந்த ஒரு மோசமான தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்போட்டியில் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் 2 ரன்களுக்கு அவுட்டனார். அவர் அவுட்டான விதம் தான் தற்போது சமூகவலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
ஆட்டத்தின் 2வது ஓவரில் பிரஷித் கிருஷ்ணா வீசிய பந்தை வில்லியம்சன் தடுப்பாட்டம் ஆட முயன்றார். ஆனால் சற்று பவுன்சானதால் பேட்டில் எட்ஜாகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. கீப்பிங்கில் நின்றிருந்த சஞ்சு சாம்சன் டைவ் அடித்து ஒற்றை கையால் பந்தை பிடித்தார்.
எனினும் வேகத்தில் பந்து, கை நழுவியது. திடீர் திருப்பம் சஞ்சு சாம்சனின் கைகளில் பட்டு எகிறிய பந்தை, ஸ்லிப் ஃபீல்டிங்கில் நின்றுக்கொண்டிருந்த தேவ்தத் பட்டிக்கல் டைவ் அடித்து பிடித்தார்.
Slow motion footage of Kane Williamson controversy out decision.#IPL #IPL2022 #RRvsSRH #NotOut #TataIPL #Cricket
— CricketO (@CricketO22) March 29, 2022
Video credit:-@IPL pic.twitter.com/AzNdoPWdWX
ஆனால் பந்து முதலில் தரையில் பட்ட பின்பு தான் பட்டிக்கல் பிடித்தாரா என்ற சந்தேகம் எழுந்தது. வீடியோவை சூம் செய்து பார்த்த போதும், பந்து முதலில் தரையில் பட்டது போன்றே இருந்தது.
பல ஆங்கிளில் வீடியோவை பார்த்த 3வது நடுவர், அவுட் கொடுப்பதாக அறிவித்தார். இது ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் உள்ளிட்ட பலருக்கும் அதிருப்தியை கொடுத்தது.
ஏனெனில் வில்லியம்சன் போன்ற கேப்டனின் விக்கெட் மிக முக்கியமானது.
அதற்கேற்றார் போல இப்போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியடைந்தது.