ட்ரம்பை விமர்சித்து கங்கனா போட்ட பதிவு.. உடனே வந்த போன் காலால் அடுத்து நடந்த விடயம்
அமெரிக்க அதிபர் ட்ரம்பை விமர்சித்து கங்கனா ரனாவத் போட்ட பதிவை பாஜக மூத்த தலைவர் கண்டித்துள்ளார்.
என்ன நடந்தது
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கத்தாரில் நடந்த வணிக மாநாட்டில் கலந்து கொண்டு இந்தியாவுடனான வணிக உறவு பற்றி பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். அதாவது, "இந்தியா அமெரிக்க பொருள்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க சம்மதித்துள்ளது அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
மேலும், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனர் டிம் குக் இடம் வலியுறுத்தினேன்" என்கிறார். மேலும், "இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் கட்டிய ஆலைகளை நிறுவுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவே அதனை கவனித்துக் கொள்ளும்" என்றார்.
இவரின் கருத்தை விமர்சித்து பாஜக எம்பி கங்கனா ரனாவத் தனது சமுக வலைதள பக்கத்தில், "அவர் அமெரிக்காவின் அதிபராக இருக்கலாம், ஆனால் உலகின் மிகவும் பிரபலமான தலைவர் இந்தியப் பிரதமர்.
டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்கும்போது, இந்தியப் பிரதமர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். டிரம்ப் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு ஆல்பா ஆண், ஆனால் நமது பிரதமர் அனைத்து ஆல்பா ஆண்களுக்கும் முதலாளி. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது தனிப்பட்ட பொறாமையா அல்லது இராஜதந்திர பாதுகாப்பின்மையா?" என்று பதிவிட்டார்.
இதையடுத்து, இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஜே.பி.நட்டா, கங்கனா ரனாவத்துக்கு போன் போட்டு கண்டித்துள்ளார். பின்னர் அந்த பதிவை நீக்கியதுடன் அதற்கான விளக்க பதிவு ஒன்றை பதிவிட்டார்.
அதில், "J.P.நட்டா என்னை அழைத்து, டிம் குக்கை இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டாம் என்று டிரம்ப் கூறியது குறித்து நான் பதிவிட்ட கருத்தை நீக்க கூறினார். எனது தனிப்பட்ட கருத்தைப் பதிவிட்டதற்கு வருந்துகிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |