இங்கு மாஃபியாக்கள் இருக்கிறார்கள்! எந்த நடிகரின் அறைக்கும் நான் போக மாட்டேன்..பகீர் கிளப்பும் பிரபல நடிகை
பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத், சினிமாவில் உள்ள மாஃபியாக்களால் திரையுலகில் ஒதுக்கப்படுவதாக கூறியுள்ளார்.
சர்ச்சை நடிகை
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். நடிகையாக இருந்தாலும் இவர் வெளியிடும் கருத்துக்களால் பலமுறை சர்ச்சைகளில் சிக்குகிறார்.
இந்த நிலையில் ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய கங்கனா, இந்தி சினிமா மாஃபியாக்கள் தன்னை தனிமைப்படுத்தி ஒதுக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தி சினிமா மாஃபியாக்கள்
இதுகுறித்து அவர் கூறுகையில், 'சினிமா மாஃபியா எப்போதுமே எனது அணுகுமுறையை திமிர் என்று தான் அழைக்கிறது. என் தாயார் எனக்கு இரண்டு ரொட்டி மற்றும் உப்பை உண்டு மட்டுமே வாழ முடியும் என்று கற்றுக் கொடுத்தார். ஆனால், எதற்காகவும் யாரிடமும் கெஞ்சக் கூடாது என்றும், என் மதிப்புமுறை/தர்மத்திற்கு பொருந்தாத எதையும் வேண்டாம் என்று கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார்' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் தனது மற்றொரு பதிவில், 'மற்ற பிரபலங்களைப் போல் திருமணங்களில் நடனம் ஆட மாட்டேன். இது ஆணவமா அல்லது நேர்மையா சொல்லுங்கள்..அதேபோல் ஹீரோக்களின் அறைகளுக்கு செல்லவே மாட்டேன் என்பதால் என்னை பைத்தியக்காரி என்று அறிவித்தார்கள்.
யாரையாவது குறிவைத்து துன்புறுத்துவதற்கு இதுதான் காரணமா? அல்லது தனிமைப்படுத்தப்பட்டதா? இப்போது கூட என்னுடைய ஒவ்வொரு பைசாவையும் ஒரு திரைப்படம் தயாரிக்க செலவிடுகிறேன். மற்ற நடிகைகளைப் போல் நான் கிசு கிசுக்களில் சிக்குவதில்லை. இதுபோன்ற காரணங்களால் இந்தி சினிமா மாஃபியாக்கள் என்னை ஒதுக்குகிறார்கள் ' என கூறியுள்ளார்.