இவர்களால் தான் எனக்கு திருமணம் நடக்கவில்லை: பிரபல நடிகை
தன்னை பற்றி வதந்திகளை பரப்புபவர்களால் தான் இன்னும் தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி நடிகை கங்கனா ரணாவத். இவர் தற்போது தாக்காட் எனும் இந்தி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கங்கனா, தொகுப்பாளரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, படத்தில் வருவது போல் நிஜத்திலும் தவறு செய்யும் ஆண்களை அடிக்கும் பெண் தானே நீங்கள்? என தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த கங்கனா, தவறு செய்யும் ஆண்களை தட்டிக் கேட்கும் பெண் என என்னை நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் நான் அப்படி அல்ல. நிஜ வாழ்க்கையில் நான் அமைதியான பெண். யாரையும் இதுவரை அடித்தது கூட கிடையாது. உங்களை போன்றவர்கள் என்னைப் பற்றி வதந்திகள் பரப்புவதால் தான் எனக்கு திருமணம் நடப்பது கூட சிரமமாக உள்ளது' என கிண்டலாக கூறினார்.