இத்தனை ஆண்டுகளில் பீகார் பட்ஜெட்டை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.., கனிமொழி விமர்சனம்
மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள நிலையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
கனிமொழி விமர்சனம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அவர், தனது 8-வது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரித்தது உள்பட பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
முக்கியமாக, பீகார் மாநிலத்திற்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
இதனால், பீகார் தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் அறிவிப்புகள் உள்ளன என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
அந்தவகையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "நான் நாடாளுமன்றத்தில் இருந்த இத்தனை ஆண்டுகளில், பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இதுவே முதல் முறை" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |